மதுரை:கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஆடைகளில் அரசியல் , சாதியை குறிக்கும் சின்னங்களோ அல்லது அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் தலைவர்களின் படங்களோ இருக்கக் கூடாது. கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவ குழு இருக்க வேண்டும், போன்ற விதிமுறைகளை விதித்து கபதி போட்டி நடத்தக் கோரிய மனு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி கபடி போட்டி நடத்த கடும் கட்டுபாடுகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ சாதியை ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் சாதியை ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதியை கட்சிகளின் புகைப்படங்களோ பிளக்ஸ் பேனர்களோ இருக்க கூடாது.