தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும்போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கு

சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும் போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்திற்குட்பட்டு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை எனக் கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The case seeks to reject the order of election commision  that transferred to another district during the election
சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும் போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கு

By

Published : Feb 10, 2021, 8:12 PM IST

மதுரை:சிவகங்கை மாவட்டம் மேலபூவந்தியைச் சேர்ந்த முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் சிவகங்கையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றுகிறேன். சிவகங்கை மாவட்டத்தில், 5 காவல் துணை கோட்டங்கள் உள்ளன. விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலில் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்கள், தங்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் அவர்களை வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆனால், 2019ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த தேர்தலில் சார்பு ஆய்வாளராக பணியாற்றியோரை அதே மாவட்டத்திலுள்ள வேறொரு துணை கோட்டத்திற்கு மாற்றினால் போதும் என கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டிலும் சார்பு ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களை தேர்தல் பணியின் போது சொந்த மாவட்டத்தில் வேறு துணை கோட்டத்திற்குள் மாற்றினாலே போதுமானது.

வௌிமாவட்டங்களில் வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவையான அளவுக்கு கிடைப்பதில்லை. உடல் நிலையும், மனநிலையும் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை சார்பு ஆய்வாளர்களை தேர்தலுக்காக வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டு மென்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் அல்லது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இதில், நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. இதில், உத்தரவிட்டால், தேர்தல் நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் யானைகள் இறப்பு தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details