மதுரை: மகாளிப்பட்டியை சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "2016-ஆம் ஆண்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் தீ காயத்திற்கு என்று தனி பிரிவு மற்றும் தோல் சேமிப்பு வங்கியுடன் சேர்ந்து உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதன்படி 60 விழுக்காடு பண உதவி மத்திய அரசும் 40 விழுக்காடு பண உதவி மாநில அரசும் என தீக்காய தனிப்பிரிவு மற்றும் தோல் வங்கி அமைப்பதற்கு ரூ.6.579 கோடி நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக டிசம்பர் 2020 ஆண்டு மத்திய அரசு 2.079 கோடியும் மாநில அரசு 1.386 கோடியும் ஒதுக்கீடு செய்தது.
இந்தியாவில் 70 லட்சம் பேர் தீக் காயங்களால் பாதிப்படைந்துள்ளனர். தீ காயங்கள் ஏற்படுபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இந்த தோல் உதவுகின்றது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தோல் சேகரிப்பு வங்கிக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.