மதுரையில் உள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, "அமித்ஷா துக்ளக் நிகழ்ச்சிக்காக சென்னை வருகிறார் அப்போது கூட்டணி பற்றி பேசுவாரா என்பது குறித்து தெரியவில்லை.
பொங்கல் பரிசு டோக்கன்கள் மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவே வழங்கப்படுகிறது. கட்சி விளம்பரம் அல்ல. கடந்த 2009-2010ஆம் ஆண்டில் திமுக தேர்தல் வருவதை கருத்தில்கொண்டே பொங்கல் பரிசை வழங்கியது. அதுவும் பொங்கல் பரிசாக பணம் அளிக்காமல், அரை கிலோ அரிசி, அரை கிலோ வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே கொடுத்தது. மேலும், அதனையும் வெறும் 80 கோடி பேருக்கு மட்டுமே வழங்கியது. அதில், திமுக சின்னமும் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமாக வழங்கப்படும் பொங்கல் பரிசில் அதிமுக தங்களது சின்னத்தையும், முன்னாள் முதலமைச்சர் படத்தையும் வைக்கவில்லை. திமுக தேர்தலுக்காக தவறான கருத்துகளை மக்களிடம் அளித்து வருகிறது.