தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹிஜாப் சர்ச்சை: மேலூரின் 8ஆவது வார்டில் 10 வாக்குகள் பெற்ற பாஜக! - மேலூரில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்திய 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றது

மேலூர் 8ஆவது வார்டில் பாஜக வெறும் 10 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அங்கு வாக்குப்பதிவன்று வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்ணை ஹிஜாபை அகற்றுமாறு பாஜக பூத் முகவர் கூறியது விவாதப் பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

மேலூரில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்திய 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றது.
மேலூரில் ஹிஜாப் சர்ச்சையை ஏற்படுத்திய 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றது.

By

Published : Feb 22, 2022, 3:09 PM IST

சென்ற பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அன்று மேலூர் நகராட்சிக்குள்பட்ட 8ஆவது வார்டுக்கான வாக்குப்பதிவு அல் அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் நடைபெற்றது. இந்நிலையில் அதே வார்டை சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார்.

அப்போது வாக்குச்சாவடியிலிருந்த பாஜக முகவர் கிரி ஹிஜாப் அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்ததை எதிர்த்து அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு அதிமுக திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து தேர்தல் அலுவலர்களால் பாஜக முகவர் கிரி வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.

ஹிஜாப் சர்ச்சையும், 10 ஓட்டுகளும்

தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி 22) நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களை திமுக வென்றுள்ளது. இந்நிலையில் மதுரை மேலூர் 8ஆவது வார்டில் பாஜக வெறும் 10 வாக்குகளைப் பெற்றது.

இதையும் படிங்க:ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details