மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையின் நுழைவுவாயில் முன்பு பிச்சை எடுத்து வாழ்ந்த முதியவர் ஒருவர் இன்று (ஜூலை.28) உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர் வைத்திருந்த பையை அலுவலர்கள் பரிசோதனை செய்த நிலையில், அவர் இரண்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
56 லட்சத்துக்கு வரவு - செலவு
மேலும் அவரது வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 36 லட்சம் ரூபாய் மொத்தமாக எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த முதியவரின் வங்கிக் கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பில் உள்ளது கண்டறியப்பட்டது தொடர்பான காணொலி இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த முதியவர் மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
உயிரிழந்து கிடந்த பிச்சைக்காரர் ”கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்த நபர், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன்? குடும்பத்தாரால் வஞ்சிக்கப்பட்டு வீட்டைவிட்டு விரட்டப்பட்டாரா? அல்லது மனநல பாதிப்பால் இந்நிலைக்கு ஆளானாரா?” என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிச்சை எடுத்து சுற்றித் திரிந்த நபரின் வங்கிக் கணக்கில் 56 லட்சம் ரூபாய் வரவு - செலவு கணக்கில் இருப்பதையும் அலுவலர்கள் கண்டறிந்தனர்.
இதையும் படிங்க:'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!