மருது சகோதரர்கள் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவில் செல்வதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகை தந்தார். அவருக்கு, அக்கட்சியினர் மேலதாளங்களோடு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில், பேசுவோர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழ்நாடு அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது. 50 விழுக்காடு ஓபிசி இடஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஏற்கனவே உயர் நீதிமன்றம் கூறியிருந்ததை உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
'அறவழியில் போராடிய பாஜகவினரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது'- எல். முருகன் அடுத்தாண்டு நிறைவேற்ற பாஜக சார்பில் முயற்சிகள் எடுக்கப்படும். மத்திய அரசை குறை சொல்வதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ளவேண்டும். திமுக கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களையும், பெண்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசுவோர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையைதான் மேற்கொண்டு வருகிறது. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும், கூட்டணி அமைவது குறித்து இறுதி முடிவு ரஜினியைப் பொறுத்துதான்" என்றார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், பாஜக ரவுடிகள் கட்சியாக உள்ளது என கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு தாய்மார்களை கொச்சைப்படுத்தியவர்களை தமிழ் சகோதரிகளே நடமாட விடமாட்டார்கள் என்றுதான் தெரிவித்து இருந்தோம். அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றி பெற தயார்படுத்தும் பணிகள் நடக்கின்றன என்றார்.
இதையும் படிங்க:திருமாவளவன், ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடமாட முடியாது - எல் முருகன் காட்டம்