தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சித்தா, யுனானி மருத்துவத்தை சேர்த்த மத்திய அரசுக்கு நன்றி' - சு.வெங்கடேசன் எம்.பி - மத்திய அரசுக்கு நன்றி சு வெங்கடேசன்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பயன்பாட்டு பட்டியலில் சித்தா, யுனானி மருத்துவத்தையும் சேர்த்த மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி - சு.வெங்கடேசன் எம்.பி
மத்திய அரசுக்கு நன்றி - சு.வெங்கடேசன் எம்.பி

By

Published : Jan 3, 2023, 12:29 PM IST

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி தெரிவித்து இன்று (ஜன. 3) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த 2021 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பயன்பாட்டு திட்டத்தில் ஆயுர்வேதா, யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவ முறைகளுக்கு "தின பராமரிப்பு திட்டம்" (Day care) வகுக்கப்பட்டு, அதற்கான மையங்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது.

மத்திய அரசுக்கு நன்றி - சு.வெங்கடேசன் எம்.பி

இந்த சலுகை சித்தா, யுனானி சிகிச்சைகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஜூன் 2, 2022 அன்று கடிதம் எழுதி இருந்தேன். இன்று அவர் "தின பராமரிப்பு சிகிச்சை" திட்டத்தில் இனி சித்தா, யுனானி சிகிச்சைகளுக்கும் வழி வகை செய்யப்பட உள்ளது; அதற்கான நெறி மற்றும் வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டு வருவதாக தன் 28.12.2022 தேதியிட்ட கடிதம் வாயிலாக உறுதி அளித்து உள்ளார்.

அமைச்சருக்கு நன்றி. இப்பயன் விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'காணவில்லை' என்ற காவி நிற போஸ்டரால் கும்பகோணத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details