தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடக்கும் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்துசமய அறநிலையத் துறை அறிக்கையின் அடிப்படையில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் குடமுழுக்கு விழா நடத்தி, இந்துசமய அறநிலையத் துறை தரப்பில் நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சையைச் சேர்ந்த செந்தில்நாதன், தமிழ் தேசிய பொதுவுடமை கட்சித்தலைவர் மணியரசன் ஆகியோர் வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி தஞ்சை பெருவுடையார் கோயிலில் நடக்கும் குடமுழுக்கு விழாவை, தமிழில் நடத்தக்கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.