தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு - தங்க தமிழ்செல்வன் - அமமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்

மதுரை: அதிமுகவின் ஆட்சியை கலைக்க அனைத்துக் கட்சிகளும் கைக்கொடுக்கும் என்று கூறியதை கூட்டணி வைத்துள்ளதாக கூறுவது தவறு என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

thangatamilselvan

By

Published : May 8, 2019, 8:39 PM IST

Updated : May 8, 2019, 11:04 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமமுகவின் கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

தேனியில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் இது இயல்பான நிகழ்வு மட்டுமே கூறினர். மேலும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்த போது அதில் ஜீரோ என காட்டியுள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை.

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து பெரும்பான்மையை காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படும் பொழுது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. இதை கூட்டணி சேர்ந்துள்ளதாக கூறுவது தவறு.

செய்தியாளர் தங்க தமிழ்செல்வன்

வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அதிமுகவின் சகாப்தம் முடிவடைந்து விட்டதால் தமிழ்நாட்டில் காலூன்ற வாய்ப்பே இல்லை. அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்று அதிமுகவினரை நாங்கள் மன்னித்தால், மக்கள் ஒரு நாள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்தார்.

Last Updated : May 8, 2019, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details