தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: வெளியானது திக்... திக்... சிசிடிவி காட்சி - அரசு ராசாசி மருத்துவமனை

மதுரை: காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த நபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

file pic

By

Published : Jun 16, 2019, 10:19 AM IST

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த அஜித், அவருடைய மூத்த சகோதரர் ரஞ்சித் இருவரும் ஜூன் 12ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ரஞ்சித், அஜித்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. இதில் அஜித் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த ரஞ்சித் அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் துறையினர் ஆறு பிரிவின் கீழ் அஜித்தின் நண்பன் விக்னேஷ் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளது.

இவர்களை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் விக்னேஷ், வின்சென்ட் செல்வராஜ் இருவரும் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் நண்பர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாகவே இந்தப் படுகொலை அரங்கேறியது தெரியவந்தது.

சிசிவிடி காட்சி

மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை காவல் துறையினர் தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் காவல் நிலையத்தின் அருகே ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details