தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தலைதூக்கி வரும் தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் - கார் விபத்து ஏற்பட்டது குண்டு வெடிப்பா

தமிழ்நாட்டில் தற்போது தலைதூக்கி உள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு அடக்கி மீண்டும் அமைதி பூங்காவாக தழைத்திட விடை காண்பாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது வேர் விட்டிருக்கும் தீவிரவாத செயற்பாடுகள் ஒடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்
தமிழ்நாட்டில் தற்போது வேர் விட்டிருக்கும் தீவிரவாத செயற்பாடுகள் ஒடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

By

Published : Oct 31, 2022, 1:09 PM IST

மதுரை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் தற்போது வேர் விட்டிருக்கும் தீவிரவாத செயற்பாடுகளை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் கார் விபத்து ஏற்பட்டது குண்டு வெடிப்பா? கேஸ் சிலிண்டர் வெடிப்பா? என்ற விவாதம் தாண்டி பயங்கரவாதத்தின் தொடக்கம் தான் அதிலிருந்து தமிழ்நாட்டில் தப்பித்து பிழைத்துள்ளது என்பதுதான் உண்மை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது வேர் விட்டிருக்கும் தீவிரவாத செயற்பாடுகள் ஒடுக்க வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்

தமிழ் சமுதாயம் மட்டுமல்ல, மனித சமுதாயத்தை காப்பாற்றவும், இந்த பயங்கரவாதத்தால் விளைவுகள் ஏற்படும், அமைதி குலைந்து போய் நாம் இன்றைக்கு பொருளாதாரத்தில் பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிற போது இந்த பயங்கரவாதத்தால் பொருளாதாரம் மிகப் பெரிய சவாலாக அமைந்து விடும்.

உதாரணமாக ஏற்கனவே நம்முடைய பெரும் முதலீடுகள் வேதாந்தா ,பாக்ஸ்கான் போன்ற முதலீடுகள் ரூ.2 லட்சம் கோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றிருக்கிறது. பயங்கரவாதத்தால் கல்வி, பொருளாதாரம், எதிர்காலம் சீரழியும். பயங்கரவாதத்தால் பசி, பஞ்சம் ,பட்டினி என்ற ஒரு நிலை இந்த நாட்டிலே உருவாகும், பயங்கரவாதம் அணு ஆயுதத்தை விட பயங்கரமானது .

இது தங்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டாக அரசு பார்க்குமானால் உண்மை நிலையை அறிவதற்கு அரசு தவறிவிடுகிற ஒரு நிலைமை உண்டாகும். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பலமுறை இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் ஈடுபட்ட அந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத சம்பவங்களோடும், பயங்கரவாத அமைப்புகளோடும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனத்தை கலைக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:குஜராத் மோர்பி பாலம் அறுந்து விழுந்த காட்சி....

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details