தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பயங்கரம்: மூதாட்டிகளை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை!

மதுரையில் இரண்டு மூதாட்டிகளை கட்டிப்போட்டு நகை, பணம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மூதாட்டிகளை கட்டிப் போட்டு நகை பணம் கொள்ளை
மூதாட்டிகளை கட்டிப் போட்டு நகை பணம் கொள்ளை

By

Published : Dec 29, 2020, 9:40 PM IST

மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (66). இவர் தனது தாய் கமலாவுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் நேற்று (டிச.29) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து, இருவரையும் சேலையால் கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 27 சவரன் நகை, ரூ. 85 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறும் அவுட்போஸ்ட் பகுதியில் பெரும்பாலும் குடியிருப்புகள் இல்லாத நிலையில், வீட்டில் இருந்த வயதான பெண்களிடம் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீச்சரிவாளுடன் வாகனம் திருடும் கும்பல் - அச்சத்தில் பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details