தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு! - மதுரை மாவட்டச் செய்திகள்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தெய்வானை என்ற யானை மிதித்ததில் பாகன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

temple-elephant-trampled-to-death
temple-elephant-trampled-to-death

By

Published : May 24, 2020, 9:12 PM IST

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அக்கோயிலில் தெய்வானை என்ற யானையை, காளிமுத்து என்ற பாகன் தினமும் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாகன் இன்றும் வழக்கம்போல யானையைக் குளிப்பாட்டுவதற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த யானை, காளிமுத்துவை தூக்கி வீசி, மிதித்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாகன் உடனடியாக, மதுரை ராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் யானை மிதித்து யானை பாகன் உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்க வேண்டும் - முகவர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details