தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் பௌர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பெளர்ணமி கிரிவலம் செல்ல தடை! - கோயிலுக்குச் செல்ல தடை
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கரோனா தொற்று காரணமாக பெரும் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பௌர்ணமி கிரிவலம் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை சிவ அம்சத்துடன் உள்ளதால், பெளர்ணமி தோறும் திருப்பரங்குன்றத்துக்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்லுவார்கள்,
திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிவரும் கிரிவலப் பாதை திருப்பரங்குன்றம், தென்பரங்குன்றம் உள்ளிட்ட நகர் பகுதிகளும், நிலையூர், அவனியாபுரம், கூத்தியார்குண்டு கிராமத்துக்குச் செல்லும் வழியாகவும் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கிரிவலம் சுற்றுவது வழக்கமான நிகழ்வு, கரோனா பரவல் காரணமாக இது ரத்து செய்யப்பட்டுள்ளது.