கரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. இதையடுத்து ஆறு மாதத்துக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு சென்னை - மதுரை இடையிலான தேஜஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு இன்று (அக்.2) வந்தடைந்தது.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.