தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிற்கே செல்லும் வகுப்பறை: மாணவர்கள் நலனில் ஆசிரியர்களின் அக்கறை!

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக ஏழை, எளிய மாணவர்களின் வீடு தேடி சென்று கல்வி கற்று கொடுப்பது என்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.

வீட்டிற்கே செல்லும் வகுப்பறை
வீட்டிற்கே செல்லும் வகுப்பறை

By

Published : Sep 18, 2020, 11:00 AM IST

Updated : Sep 24, 2020, 9:57 AM IST

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் கல்விச் சூழலே மிகப்பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஆசிரியர்களின் தனிப்பட்ட அக்கறையின் காரணமாக மாணவர்களின் வீடு தேடி சென்று கல்வி கற்று கொடுப்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.

மதுரை கீழ சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது டாக்டர் திருஞானம் தொடக்கப்பள்ளி. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மதுரையின் புறநகரில் உள்ள ஏழை குழந்தைகளே பெரும்பாலும் பயில்கின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் தங்களின் சொந்த முயற்சியில் மாணவர்களை அழைத்துவர வாகன வசதி செய்து கொடுத்துள்ளனர்.

கற்பிக்கும் போது

அதுமட்டுமன்றி மாணவர்களின் நலனுக்காக அரசாங்கம் கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை உடனடியாக கொண்டு சேர்ப்பதிலும் இப்பள்ளியின் ஆசிரியர்கள் முன்னணியில் உள்ளனர். வாரந்தோறும் மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று கதை சொல்லி நல்வழிப்படுத்துகின்ற பணிகளை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய கரோனா தொற்று பேரிடர் காலத்தில் தொடர்ந்து கல்வி கற்பது என்பது மிகச் சிக்கலாக உருவாகி இருக்கும் நேரத்தில், இணையவழி, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தொடர்பு முறைகளை பயன்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் கல்வியை கற்றுக் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன், வாட்ஸ் அப் வசதி இல்லாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தருவது சாத்தியமற்ற நிலையில், அவர்களின் வீடு தேடி சென்று கல்வி கற்று கொடுப்பதில் டாக்டர் திருஞானம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அக்கறை காட்டி வருகின்றனர்.

மாணவர்கள் நலனில் ஆசிரியர்களின் அக்கறை

இதுகுறித்து அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சாஷனா கூறுகையில், எங்கள் படிப்பின் மீது அக்கறை கொண்டு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக வீட்டிற்கு வருகை தந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.

குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஓர் இடத்தை தேர்வு செய்து அக்கம் பக்கத்திலுள்ள தங்கள் பள்ளியின் குழந்தைகளை ஆசிரியர்கள் அழைத்து வந்து அமர வைக்கின்றனர். முதலில் ஆசிரியர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் சோதனை நடைபெறுகிறது. பிறகு மாணவ, மாணவியர் அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டு கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு தகுந்த இடைவெளியுடன் அமர வைக்கப்படுகின்றனர். பிறகு வழக்கம்போல் வகுப்பறை அந்தத் தெருவிலேயே நடைபெற தொடங்குகிறது.

ஆசிரியர்கள்

நான்காம் வகுப்பு பயிலும் ஒயிலா ஷிவானி கூறுகையில், எனது பெற்றோரிடம் ஆண்ட்ராய்டு வசதியுள்ள செல்ஃபோன் இல்லாததால் நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது. அதனைப் போக்கும் வண்ணம் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் வீடு தேடி வந்து கற்றுக் கொடுக்கின்றனர் என்றார்.

இதையும் படிங்க: திருகல் நோயால் பாதிக்கப்படும் வெங்காயப்பயிர்கள் - மாற்று விவசாயத்தை நாடும் அவலத்தில் விவசாயிகள்!

Last Updated : Sep 24, 2020, 9:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details