தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் தொடர்பான வழக்கு - பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - teachers-transfer-case madurai high court order

2020-2021ஆம் ஆண்டு நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Sep 8, 2021, 3:41 PM IST

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு 2019இல் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிட மாற்றம் தொடர்பான கலந்தாய்வு நடைபெறவில்லை ஆனால், நிர்வாக அடிப்படையில் முறைகேடாக பல ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே தமிழ்நாடு முழுவதும் நிர்வாக அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், 2020-2021 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிட மாற்றம் குறித்த கலந்தாய்வு நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details