மதுரை: கரோனா தொற்றுப் பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இன்று (ஜுன்.14) முதல் சில தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, டாஸ்மாக், தேநீர் கடைகள், இ - சேவை மையங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.