மதுரை மணலூர் பகுதியிலிருந்து சுற்றுச்சாலை அருகே உள்ள பகுதிக்கு மதுபான பாட்டில்கள் ஏற்றி டாஸ்மாக் லாரி வீரகனூர் அருகே வந்தபோது தனியார் பேருந்தை முந்த முயன்றது. அப்போது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கவிழ்ந்த டாஸ்மாக் வாகனம்... பெருக்கெடுத்து ஓடிய மதுபானம்! - மதுபானம் ஏற்றி வந்த லாரி
மதுரை: மணலூர் அருகே டாஸ்மாக் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நெடுஞ்சாலையில் மதுபாட்டில்கள் உடைந்து மதுபானம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனத்திலிருந்த ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் உடைந்து அதிலிருந்த மதுபானம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஏராளமான மதுபாட்டில்கள் விழுந்து நொறுங்கி சாலை முழுவதும் மதுவாக காட்சியளித்ததுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.
இந்த விபத்தால் ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நீண்ட நேரம் காத்துக்கிடந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.