தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு டாஸ்மாக் கடையால் பொது மக்களுக்கு இடையூறு இல்லை... கடையை பூட்ட உத்தரவிடமுடியாது-உயர் நீதிமன்றம் - கன்னியாகுமரி

அரசு டாஸ்மாக் கடையால் பொது மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாததால் டாஸ்மாக் கடையை பூட்ட உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதி மன்றம்
உயர்நீதி மன்றம்

By

Published : Jul 16, 2022, 12:50 PM IST

மதுரை: மாவட்டம் நடைகாவு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "கன்னியாகுமரி நித்திரவிளை அருகே நம்பாளிசாலை ஆற்றுப்புரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது எனவும் மக்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, டாஸ்மாக் கடையை மூடுமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இதேபோல் வேறொரு மனு ஏற்கனவே தாக்கலானதும் அப்போது கமிஷனர் ஆய்வு செய்து, விதிப்படி கடை இயங்குவதாகவும், குறிப்பிட்ட தொலைவில் பள்ளி, கல்லூரியோ, வழிபாட்டுத் தலங்களோ இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு தள்ளுபடியானது என கூறப்பட்டது.

இதையடுத்து போராட்டம் நடக்கிறது என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிடட்னர்.

இதையும் படிங்க:42-ஆவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியது மேட்டூர் அணை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details