தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாடு வர வாய்ப்பில்லை - அரசு பதில் மனு - Tamilnadu news

மதுரை: பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

By

Published : Jun 5, 2020, 6:44 PM IST

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ”கரோனா தொற்றால் தமிழ்நாடு ஏற்கனவே பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த வகை வெட்டுக்கிளிகள் விவசாயப் பயிர்களை அப்படியே அழிக்கும் தன்மை கொண்டவை. ஆகவே, வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தவும், தமிழ்நாடு விவசாயிகளைக் காப்பாற்ற தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவிகிதமாக அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் - புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாட்டிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படியே வந்தாலும் வெட்டுக்கிளிகளால் விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்மை, தீயணைப்பு, தோட்டக்கலை அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வெட்டுக்கிளிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றனவா என கண்காணித்துவருகிறது.

வெட்டுக்கிளிகளால் பாதிப்பு ஏற்பட்டால், விவசாய பயிர்களுக்கு மருந்து தெளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பயிர் பாதுகாப்பை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுவருகிறது” என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. அரசின் இந்த பதிலை அடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதையும் படிங்க :பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பும் அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details