அதிமுக - பாஜக கூட்டணியை இறுதிசெய்தார் ஜெ.பி. நட்டா! - பாஜக கூட்டணி
21:07 January 30
20:52 January 30
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளன. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும், பரப்புரைகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை இன்று (ஜன. 30) மதுரையில் தொடங்கியுள்ளார். அப்போது அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில்தான் பாஜக தொடருகிறது என அறிவித்துள்ளார்.
பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, "உங்களுடன் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எதிர்வரும் காலங்களில் பாஜகவும், அதிமுக மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் தேர்தலில் இணைந்து போட்டியிடும் என்று பாஜக முடிவுசெய்துள்ளது என்று இங்கு அறிவிக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.