உலகளவில் மிகவும் பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக விறுவிறுப்புடன் கோலாகலமாக நிறைவுபெற்றது. வெற்றிபெற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணவந்த மக்கள் காளையர்களுக்கு உற்சாகத்தை அளித்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் பேசுகையில், இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பெரிய அளவிலான அசம்பாவிதங்களின்றி நிறைவுபெற்றுள்ளது. ஆனால், வாடிவாசலுக்கு பின்புறம் தனது சொந்த காளையை அழைத்துவரும்போது, மற்றொரு காளையால் அடிவயிற்றில் குத்தப்பட்டு ஸ்ரீதர் என்ற மாட்டின் உரிமையாளர் உயிரிழந்தார்.