தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படம் இடம் பெறுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு - பிரதமர் மோடி

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் படங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

By

Published : Jul 28, 2022, 10:00 PM IST

மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறச் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா; கமல்ஹாசனின் குரலில் தமிழ் பண்பாட்டு நிகழ்த்துக் கலை!

ABOUT THE AUTHOR

...view details