ராமநாதபுரம் மாவட்டம், மோர் பண்ணையைச் சார்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சித்திரவேல், சேரன், விஸ்வநாதன், மணிமாறன், முத்துகிருஷ்ணன், பிரபு, சிவகங்கையை சேர்ந்த சண்முகம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய எட்டு பேரும் சோமாலியா நாட்டிற்கு மீன்பிடி தொழிலாளர்களாக முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து ஏஜென்ட் மூலமாக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக சென்றனர்.
அங்கு சில நாட்கள் வேலை பார்த்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பால் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை. அதேபோல் அங்குள்ள கம்பெனியினர், இவர்களுக்கு பேசியது போல சம்பளமும், உணவும் வழங்கவில்லை. இதன் காரணமாக, அவர்கள் அங்கு உணவிற்கு கூட வழியின்றி பரிதவித்து வருகின்றனர்.
சோமாலியா நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Vande Bharat
மதுரை: சோமாலியா நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று தவித்து வரும் தமிழர்களை மீட்கக் கோரி வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிளை
இவர்களை மத்திய, மாநில அரசுகள் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து, அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ண வள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, செப்டம்பர் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.