தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை 13 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு!

Madurai DVAC Raid: அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் பணியாற்றி வந்த மதுரை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்திய நிலையில் 13 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 7:54 AM IST

Updated : Dec 2, 2023, 12:11 PM IST

மதுரை:மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி (Ankit Tiwari) என்பவர் கடந்த 29.10.2023 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவரான சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மருத்துவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் முடித்துவைக்கப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி, அவ்வழக்கில் அமலாக்கதுறை விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும். 30.10.2023 அன்று மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிட் திவாரி கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் மதுரைக்குச் சென்றபோது அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவின் காரிலேயே ஏறிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் 3 கோடி தரவேண்டும் என்றும், பின்னர் தனது உயரதிகாரிகளோடு பேசுவதாகத் தெரிவித்துவிட்டு இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என்றும் பேரம் பேசியுள்ளார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அரசு மருத்துவர் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர் மேல் அதிகாரிகளுக்கும் பங்குதர வேண்டி உள்ளதால் பேசியபடி முழுத்தொகையான 51 லட்சத்தையும் தரவேண்டும் என்றும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 30ஆம்தேதி அன்று திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். இரண்டாவது தவணையாக நேற்று காலை திண்டுக்கல்லில் வைத்து 20 லட்சம் லஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டபோது அவர் கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் இதுபோன்று மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்ப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 50க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக சோதனைக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டு அலுவலகத்தில் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் கோயம்புத்தூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட CRPF படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் ஏற்கனவே இந்தோ திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால் CRPF படையினரை அனுமதிக்க முடியாது என கூறினர். அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து CRPF அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக வெளியிலயே காத்துக்கிடந்தனர். இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அம்ரித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் யாரையும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக் கணக்கில் பணம் பெற்றுள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதேபோன்று அம்ரித் திவாரி லஞ்சம் பெற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்ரித் திவாரி பயன்படுத்திய அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள் விடிய விடிய 13 மணி நேரத்திற்கு பிறகு வெளியே சென்றனர். சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க:காவல் துறையில் சங்கம் அமைக்க வலியுறுத்தி வீடியோ வெளியிட்ட காவலருக்கு கட்டாய பணி ஓய்வு!

Last Updated : Dec 2, 2023, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details