மதுரை:வைணவத் திருத்தலங்களில் மிகப் பழமையும் தொன்மையும், சிறப்பும் வாய்ந்தது மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். அவற்றில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து, இராப்பத்து என்றும், திருஅத்யயன உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு! - திருஅத்யயன உற்சவம்
மதுரை அழகர் கோயிலின் உபகோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Etv Bharatதல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
இந்த இருபது நாட்களில் ஆழ்வார்கள் பன்னிருவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் நான்காயிரமும் பாடப்படுகின்றன. திவ்யப்பிரபந்தம் பாடுவதற்காக ஏற்பட்ட திருவிழா தான் வைகுண்ட ஏகாதசி திருவிழா. இன்று காலை 6.30 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் வழிபட்டனர்.
இதையும் படிங்க:கோட்டை அழகிரி நாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு