மதுரை பாராளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் இன்று பாராளுமன்றத்தில், "தமிழ் பண்பாட்டின் தலைநகரான மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும்" என்றுக் கூறி தனது முதல் உரையை தொடங்கியுள்ளார்.
'வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும்' - சு.வெங்கடேசனின் முதல் உரை - சு.வெங்கடேசன்
டெல்லி: "மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும்" என்று, பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தனது உரையில் கூறுகையில், "மதுரை வெறும் நகரமல்ல... இது தமிழ் பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம். உலகில் 2000 வருடத்திறகு முன்பிருந்து இன்றைக்கும் மதுரை வாழும் நகரமாக இருக்கின்றது. சமீபத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறைகள் கீழடியில் நிகழ்த்திய அகழ்வாய்வு மதுரையின் செழுமையையும் வளமையும் பறைசாற்றுகிறது. இங்கு கண்டுபிடிக்கபட்ட 15,000 தொல்பொருள்கள் ஒரு பெரும் நாகரிகத்திற்கு சாட்சி சொல்கிறது. எனவே,மதுரையை வரலாற்று பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க வேண்டும்", என்று பேசியுள்ளார்.