மதுரை:இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "மூன்று விலைகள் வைத்து மாநிலங்களை அல்லாட விட்டதற்கா? ஒன்றிய அரசு ஒன்று இருக்கும் போது ஒவ்வொரு நாடாய் மாநில அரசுகளை தடுப்பூசி கிடைக்குமா என்று அலைய விட்டதற்காகவா? கடும் எதிர்ப்பு வந்த பிறகு தடுப்பூசி கொள்கையை திரும்பப் பெற்று அப்போதும் கூட 25 விழுக்காட்டை தனியாருக்கு ஒதுக்கிய கார்ப்பரேட் பாசத்திற்காகவா?
இந்தியாவில் உற்பத்தியான தடுப்பூசிகளை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு இங்கே இந்திய மக்களை தடுப்பூசி கிடைக்காமல் அலை மோத விட்டதற்கா? தடுப்பூசி பற்றாக்குறை வந்தவுடன் எவ்வளவு தடுப்பூசி இருக்கிறது என்பதை கூட மக்களுக்கு சொல்லக் கூடாது என மாநில அரசுகளுக்கு வாய்ப்பூட்டு போட்டதற்கா?