தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக் கைதிக்கு உதவிய சிறைக்காவலர் தற்காலிகப் பணியிடை நீக்கம்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விசாரணைக் கைதி தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள பிளேடு கொடுத்து உதவியதாக சிறைக்காவலர் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை கைதிக்கு உதவிய சிறைக்காவலர் தற்காலிகப் பணி நீக்கம்
விசாரணை கைதிக்கு உதவிய சிறைக்காவலர் தற்காலிகப் பணி நீக்கம்

By

Published : Jun 1, 2022, 9:44 PM IST

மதுரைமத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த சமயநல்லூரை சேர்ந்த முகமது உசைன் என்பவர், கடந்த மாதம் சக சிறைக் கைதியுடன் ஏற்பட்ட தகராறில் டியூப் லைட்டை உடைத்து தன்னைத் தானே கீறிக்கொண்டு, காயமுற்று சிறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், பிளேடால் தன்னைத் தானே இடது கை மற்றும் வலது காலின் தொடைப்பகுதியிலும் கிழித்துக்கொண்டார்.

அங்கு பணியிலிருந்த காவலர்களை விசாரணை நடத்தியதில் செல்வகுமார் என்ற காவலர், உணவு இடைவேளைக்கு செல்வதற்காக உடன் பணியிலிருந்த சின்னச்சாமி என்ற காவலரிடம் பாதுகாப்பு பொறுப்பை கொடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் சிறைவாசி முகமது உசேனுக்கு சின்னச்சாமி என்பவர் பிளேடு கொடுத்ததாகவும் செல்வகுமார் உணவு அருந்திவிட்டு வந்த பின்பு தான் சென்று விடுவேன், பிறகு பிளேடால் கிழித்துக்கொள் என்று சின்னச்சாமி கூறியதாகவும்;

அதனால் தான் செல்வக்குமார் சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் பிளேடால் கிழித்துக்கொண்டதாகவும் சிறைவாசி தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்ததுள்ளார். இது தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சிறைக்காவலர் சின்னச்சாமி என்பவரை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:திருப்பூரில் தாய், மகன்கள் கொலை: வழக்கில் தேடப்பட்டவர் கிணற்றில் சடலமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details