மதுரை: கடந்த ஆண்டு நில அளவீடு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, நவீன தொழில்நுட்பம், நவீன இயந்திரங்கள் மூலம் நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாள்களில் நில அளவீடு செய்ய வேண்டும்.
தவறினால் கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும். நில அளவீட்டுக்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். நில அளவீட்டுப் பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். நில அளவையர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவு ரத்து