தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் நண்பரோடு சண்டை போட்ட துணை நடிகையால் பரபரப்பு!! - தகராறு

வட மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகையும் அவரது நண்பரும் மாறி மாறி நடு ரோட்டில் சண்டையிட்டு கொண்ட நிலையில் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 27, 2023, 7:47 PM IST

நடுரோட்டில் நண்பரோடு சண்டை போட்ட துணை நடிகையால் பரபரப்பு!!

மதுரை பழங்காநத்தம் புறவழிச்சாலை உள்ள நேரு நகர் பிரதான சாலையில் இளம் ஜோடி தங்களது சொகுசு காரின் உள்ளே சண்டை போட்டதுடன் நடுரோட்டிலும் இறங்கி சண்டை போட்டுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியைச் சேர்ந்த துணை நடிகை அங்கீதா பட்டாச்சாரியா என்பது தெரியவந்தது. இவர் தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம், ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் சேர்ந்து, மும்பையில் இருந்து வந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து கோவையில் வாடகைக்கு கார் எடுத்து, இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சுற்றி பார்க்க திட்டமிட்டு, நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். நேற்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும் துணை நடிகையாகத் தான் பல்வேறு படங்களில் நடித்துள்ளதாகவும் அங்கீதா பட்டாச்சாரியா கூறினார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றி பார்க்க திட்டமிட்டிருந்த நிலையில், தன்னிடம் தனது நண்பர் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும், அதோடு தனது பணத்தையும் ஆண் நண்பர் நிதிஷ்குமார் எடுத்துக்கொண்டதாகவும், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினார்.

இதனையடுத்து ஒருவர் மீது ஒருவர் போலீசாரில் புகார் அளித்தனர். இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன், இருவரையும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து ரோட்டில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸூக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ தகவல்

ABOUT THE AUTHOR

...view details