தமிழில் வெளியான 'ரம்மி', 'ஜிகர்தண்டா', 'திலகர்', 'கொம்பன்','வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தவர் 'ரம்மி' செளந்தர். இவர் தற்போது ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்கள் ஆகியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்.
தன்னலம் பாராத நிவாரண உதவி - துணை நடிகரின் மனிதநேய சேவை - தன்னலம் பாராத நிவாரண உதவி: துணை நடிகரின் மனிதநேய சேவை
மதுரை: கரோனா கால ஊரடங்கால் பாதிக்கப்படும் பல்வேறு தரப்பு மக்களுக்காக தமிழ்த் திரைப்பட துணை நடிகர் 'ரம்மி' செளந்தர் மனிதநேயத்துடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இதுகுறித்து செளந்தர் கூறுகையில், 'திரைப்படத்துறை சங்கத்தில் பதிவு செய்யாத நிறைய துணை நடிகர்கள் உள்ளனர். ஆகையால், அவர்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் முயற்சியை மேற்கொண்டேன். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோரும் நிவாரணப்பொருட்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கும் அரிசி, பருப்பு, காய்கறிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறேன்.
இதற்காக எனது நண்பர்கள் பலர் என்னுடன் உறுதுணையாக இருந்து இந்த உதவிகளை வழங்குவதற்கு ஊக்கம் தருகின்றனர். இந்த உதவிகளை சினிமாவில் சம்பாதித்த வருமானம் மூலம் நான் செய்யவில்லை. மாறாக, சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறேன். அதன் மூலம் நான் சம்பாதித்த வருமானத்தின் மூலம் இந்த உதவியை செய்து வருகிறேன்' என்று கூறினார்.