அத்திவரதரை தரிசனம் செய்வது தொடர்பாக சுகிசிவம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்துக்களின் உணர்வை நான் மதிக்கிறேன். சிவகாசியில் நான் பேசிய மேடைப்பேச்சு ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் அதில் ஒரு நிமிடத்தை மட்டும் வெட்டி தவறாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்து மதத்தில் இருந்து தனிமைப்படுத்த சதி வேலை நடக்கிறது: சுகிசிவம் வேதனை! - அத்திவரதர்
மதுரை: இந்து மதத்தில் இருந்து என்னை தனிமைப் படுத்துவதற்கான சதி வேலைகள் நடந்துவருவதாக, ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் வேதனை தெரிவித்துள்ளார்.
sugi sivam
அதே மேடையில் இந்துமதத்தின் கர்ம யோகம், ஞான யோகம் குறித்து பேசியுள்ளேன். இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறேன். இந்து மதத்தின் வலிமை மிக்க காவல்காரனாக நான் தொடர்ந்து பணியாற்றுகிறேன். எனக்கும் இந்துக்களுக்கும் இடையே பிரிவினை ஏற்படுத்த சதி வேலை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளேன் என்றார்.