அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை ஒரு பக்கம் என்றால், வாட்டி வதைக்கும் வெயில் மற்றொரு பக்கம் என மதுரை கடந்த சில நாட்களாக சூடாகிக் கொண்டிருக்கிறது. 100 டிகிரிக்கும் மேல் வெப்பத்தால் தகித்த மதுரையில் இன்று 7 மணியளவில் பெய்த மழை மண்ணை சற்றே குளிர்வித்துச் சென்றது.
வெப்பத்தால் தகித்த மதுரையை குளிர்வித்த மழை! - Heat in Tamil Nadu
கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் மேல் மதுரையில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், இன்று (ஏபரல் 01) மாலை பெய்த திடீர் மழை காரணமாக குளிர்ச்சி அடைந்தது.
சுமார் அரை மணி நேரமாகப் பெய்த இந்த திடீர் மழையால் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் இந்த மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இன்றிலிருந்து 5 நாட்கள் கடும் வெப்பம் நிலவுவதோடு, அனல் காற்றும் கடுமையாக இருக்கும் என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பெய்த மழை மதுரை மண்ணை குளிர்வித்துச் சென்றுள்ளது.
இதையும் படிங்க:வாக்குச்சாவடிகள் அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!