தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே நாளில் ரூ. 11.8 கோடி கல்விக்கடன் - சு வெங்கடேசன் எம்பி - Su Venkatesh MP

மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் மேளாவில் இன்று ஒரே நாளில் ரூ. 11.8 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சு வெங்கடேசன் எம்பி ட்விட்
சு வெங்கடேசன் எம்பி ட்விட்

By

Published : Oct 20, 2021, 10:16 PM IST

மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அமெரிக்கன் கல்லூரியில் கல்விக் கடன் மேளா இன்று (அக்.20) நடைபெற்றது. இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், “கல்விக்கடன் சிறப்பு முகாம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. அதில் ஆயிரத்து 355 மாணவர்கள், தங்களது உயர்கல்விக்காக கல்விக்கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று ஒருநாளில் 171 மாணவர்களுக்கு, ரூ. 11.8 கோடி உடனடியாக கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட மதுரை மாவட்ட மாணவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய மாவட்ட நிர்வாகம், வங்கி அலுவலர்கள், அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம், என்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றி! கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவறவிடும் மாணவர் யாரும், மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் முதல் இளம் பஞ்சாயத்துத் தலைவர் - பதவியேற்ற அனு

ABOUT THE AUTHOR

...view details