மதுரை: 'இயந்திரம் இயந்திரத்தனமாகத்தான் இருக்கும். ஆகவேதான், மனித தலையீடு வேண்டும் என்று கேட்டோம். ஆனால், மனிதர்களிடம் இருந்தும் இயந்திரத்தனமாக பதில் வருகிறது' என சு.வெங்கடேசன் எம்.பி. ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (டிச.28) அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'எளிய குடும்பத்தைச் சேர்ந்த கோவை அனில் குமார் என்பவருக்கு பாதுகாப்பு துறை சிவில் ஊழியர் தேர்வுக்கான மையம் (Defence Dept Civilian Staff Selection Centre) அவர் சென்னையில் கேட்டிருந்தும், 2500 கி.மீ. தூர உத்தரகாண்ட் கனாசரில் போடப்பட்டு இருந்தது. மையத்தை மாற்றி தருமாறு 02.12.1022 அன்று பாதுகாப்புத்துறை நியமன அலுவலருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.