நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வரும் நிலையில், தகுந்த இடைவெளி குறைந்து வருவதைக் கண்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே செல்லும் மக்களிடம் தனிமனித இடைவெளி என்பது கேலிக்கூத்தாகவே உள்ளது.
இதனால், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் விநோதமான முறையில் மக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகின்றனர். அந்த வகையில் மதுரையில் இரண்டு மாணவர்கள் யோகா மூலம் விழிப்புணர்வு செய்து வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சம்ஜத்கான். இவர் இருசக்கர வாகனம் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன்கள் அசாருதீன், சல்மான்கான் ஆகிய இருவரும் யோகா பயிற்சியில் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்கள். இந்நிலையில், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், யோகா மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வாங்க யோகா கற்றுக்கொள்ளலாம் குடையுடன் ஒம் கார ஆசனம், வீரபத்ர ஆசனம் , பத்மாசனம், ராஜ கபட ஆசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து கரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டனர். மாணவர்கள் இருவரும், தாங்கள் கற்றதை பிறருக்கும் கற்பித்து, பயனுள்ள வகையில் விழிப்புணர்வு செய்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா அறிகுறி? - தேனி வீட்டில் தனிமைப்படுத்தல்