தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வழியில் தொழிற்கல்வியை கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை - பாண்டியராஜன் - அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

மதுரை: தமிழ் வழியில் தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக இருந்ததால் மாணவர்கள் தமிழ்வழியில் தொழிற்கல்வியை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

minister
minister

By

Published : Nov 27, 2020, 10:16 PM IST

தமிழ்நாடு தொல்லியல் மற்றும் தமிழ் பண்பாட்டு வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "அடுத்த கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் தொழிற்கல்வி தாய்மொழி வழியில் பயிலலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் தொழிற்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், தற்போதைய சூழலில் தமிழ் வழியில் தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவாக இருந்ததால், மாணவர்கள் தமிழ் வழி தொழிற்கல்வியை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. சிறப்பு கவனம் எடுத்து என்ஐடி, ஐஐடி (NIT, IIT) கல்லூரிகளில் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதற்கான அனைத்து முயற்சிக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக நின்று, ஆயத்த பணிகளை மேற்கொள்ளும்" என தெரிவித்தார்.

பின்னர், கீழடியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூட்டின் வயதை கண்டறியும் ஆய்வுக்கூடம் அமைக்க நிதி விடுவித்தது குறித்த கேள்விக்கு, "உலக அளவிலான தொல்லியல் சார்ந்த (Nature Magazine) பத்திரிகையில் கீழடியில் தான் முதன்முதலாக 2ஆயிரத்து 650 ஆண்டு முன்பு நானோ டெக்னாலஜியை தமிழன் பயன்படுத்தியிருப்பதை உலகம் அறிய பிரபலப்படுத்தியுள்ளது பெருமை கொள்ளவேண்டும்.

தொழிற்கல்வியை கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை

ரூசா நிதி ஒதுக்கீடு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே வந்துவிட்டது. கடல் சார்ந்த தொல்லியல் ஆராய்ச்சிக்கான நிதியும் மாநில அரசால் ஒத்துக்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கார்பன் டெஸ்டிங் தொழில்நுட்ப முறையை மேற்கொள்ள ஆய்வுக்கூடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.

இதையும் படிங்க:'கருப்பு சட்டத்தை மோடி அரசு திரும்ப பெறவேண்டும்' : ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details