கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் என்பவரின் மகள் சசியா (21). இவர் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப். 24) அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலையால் உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசியாவின் தந்தை பிரைட், உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். அந்த வேதனையின் காரணமாக மாணவி சசியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.