தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பொழிந்தது. இதனால், ஆங்காங்கே சிறிய மரங்கள் சரிந்தன. மேலும், சில இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை அடுத்த தண்ணீர்பாறை தோட்டத்தில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் தென்னை மரத்துக்கு அடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகள் மீது இடி தாக்கி பரிதாபதாக உயிரிழந்தன.
இதனையடுத்து காமயகவுண்டன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர், இறந்த மாடுகளின் உடல்களை பரிசோதனை செய்த பின்பு தோட்டத்திலேயே 3 மாடுகளும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டன.