மதுரை:மதுரை மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று (ஜுன் 2) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் துறை வாரியாக அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன். மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.