தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: கவனம் கொள்ளுமா அரசு? - nattupura kalaignargal

திருவிழாக்களுக்கு கலையூட்டிய கலைஞர்களின் வாழ்வதாரப் பிரச்னையை தீர்க்க அரசு கவனம் செலுத்துமா?
திருவிழாக்களுக்கு கலையூட்டிய கலைஞர்களின் வாழ்வதாரப் பிரச்னையை தீர்க்க அரசு கவனம் செலுத்துமா?

By

Published : Apr 2, 2020, 4:25 PM IST

Updated : Apr 2, 2020, 5:55 PM IST

09:42 April 02

திருவிழாக்களுக்கு கலையூட்டிய கலைஞர்களின் வாழ்வதாரப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்?

சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல நாடுகளை ஆட்கொண்டுவருகிறது. வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியில் வரக்கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒரு புறம் கரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுவது என்றெண்ணினாலும், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி, தமிழ் வளர்த்த மதுரையில் திருவிழாக்களை அழகுபடுத்தும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது.

தமிழ் வளர்த்த மதுரை மல்லிக்கு மட்டுமின்றி திருவிழாக்களுக்கும் பிரபலமான ஒன்று. குறிப்பாக கோயில் நகரமான மதுரையில் மாதம் ஒரு கோயில் திருவிழாவானது கொண்டாடப்படும். குறிப்பாக தை, மாசி, பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் அதிகமான கோயில் திருவிழாக்கள் கொண்டாடப் படுவது வழக்கம். திருவிழா காலங்களில் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுவதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாட்டுப்புற கலைஞர்களின் மாநிலத் தலைவர் கூறுகிறார்.

கடந்த மூன்று வருடங்களாக திருவிழா காலங்களில் இது போன்ற நிகழ்வு ஏற்படுவதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் தங்களுக்கு மத்திய மாநில அரசுகள் எதாவது நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க...தடையை மீறுபவர்களுக்கு ராமதாஸ் ட்விட்டரில் வேண்டுகோள்

Last Updated : Apr 2, 2020, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details