மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் 12 அமரர் ஊர்திகள் இருந்தன. ஆனால் தற்போது ஐந்து அமரர் ஊர்திகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் நேற்று மேலூரில் கொலையான உடல் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மேலூர் கொண்டு செல்ல வெகு நேரமாக அமரர் ஊர்தி வராததால் மருத்துவமனை ஊழியர்களுக்கும், உறவினர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமரர் ஊர்தி பற்றாக்குறையால் பிணவறையில் தேங்கும் உடல்கள்! - ராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை: ராஜாஜி அரசு மருத்துவமனையில் 5 அமரர் ஊர்திகள் மட்டுமே உள்ளதால், உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல்கள் பிணவறையிலேயே தொடர்ந்து தேக்கம் அடைந்துவருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் பேசுகையில், ”உடற்கூறாய்வு செய்த உடலை பார்க்கவும், உடற்கூறாய்வு செய்வதற்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டும், உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்கிறார்கள் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் தினமும் சுமார் 15 உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. ஆனால் அரசின் 5 அமரர் ஊர்தி வைத்து அனைத்து உடல்களையும் விரைவாக அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், இறந்தவர்களில் உறவினர்கள் தவித்துவருகின்றனர். இதை பயன்படுத்தி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கொண்டு செல்ல அதிக பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சுமத்தப்பட்டும் அரசு நிர்வாகத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.