தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன்‌ ரம்மியால் மாணவர் தற்கொலை - losing money on online rummy in madurai

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன்‌ ரம்மி: ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் தற்கொலை!
ஆன்லைன்‌ ரம்மி: ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் தற்கொலை!

By

Published : Dec 16, 2022, 11:18 AM IST

Updated : Dec 16, 2022, 11:36 AM IST

மதுரை:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த உரக்கடை உரிமையாளர் தனசேகரன் என்பவரது மகன் வினோத்குமார் (21). டென்னிஸ் விளையாட்டு வீரரான இவர், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, கணினி அறிவியல் படிப்பில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வினோத் தான் தங்கியிருந்த அறையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கள்ளிக்குடி காவல் துறையினர், மாணவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மாணவர் வினோத்குமார் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பதும், ரம்மி மற்றும் ஃப்ரீ பயர் போன்ற விளையாட்டுகளில் அதிகளவில் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்து விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், “மாணவர் வினோத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட பெற்றோரிடம் பணம் வாங்கியுள்ளார். அடிக்கடி பணம் வாங்கியதால் பெற்றோர் வினோத்குமாரை கண்டித்துள்ளனர். ஆகவே, ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது.

இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், வினோத்குமார் மனவிரக்தியில் இருந்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு நண்பர்களுடன் வெகுநேரம் சிரித்து பேசி, விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த நிலையில் அனைவரும் உறங்கச் சென்ற பின்னர் மற்றொரு அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கிறார்'' என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி ரத்து மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரிக்கை - சரத்குமார்

Last Updated : Dec 16, 2022, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details