மதுரை:2023-24 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு ரயில்வே துறையின் கிடைக்கும் திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலமாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, "அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் அம்பாசமுத்திரம், காரைக்குடி, பழனி, சோழவந்தான், விருதுநகர் உள்ளிட்ட 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தபட உள்ளன.
ரயில்வே பாதைகள் மின் மயாமாக்கல் பணி 76 சதவிதம் நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்திற்குள் 90 சதவித பணிகளும் முடிக்கப்படும். ரயில் பாதைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை எனவும், வனத்துறை கட்டுப்பாட்டில் நிலங்கள் இருப்பதால் வனத்துறை கையகப்படுத்தி வழங்கினால் தனுஷ்கோடி வரை ரயில் பாதை விரைவில் அமைக்கப்படும்.