மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள பாசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ். தனது வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்திலிருந்து பிறந்து சில நாள்களே ஆன அணில் இரண்டு குஞ்சுகள் விழுந்து கிடப்பதைப் பார்த்து, அவற்றை தூக்கி வந்து வீட்டில் பாலூட்டி வளர்த்து வந்தார்.
கால்நடை மருத்துவர் என்பதால் கண்கூட திறக்காத அணில் குஞ்சுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, இங்க் ஃபில்லர் மூலமாகத் தொடர்ந்து பாலூட்டி அவற்றைக் காப்பாற்றிவிட்டார் மெரில் ராஜ். அணில் குஞ்சுகளும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ரோமங்கள் முளைத்து, சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கின. அவை இரண்டுக்கும் ஆரோ, ஆம்பல் எனப் பெயரிட்டும் அழைத்து வந்தார்.