மதுரை மடீட்சியா அமைப்பின் தலைவர் முருகானந்தம் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே சிறு மற்றும் குறுந்தொழில்கள் மிகக் கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றன. ஐந்து தொழிலாளர்களைக் கொண்ட சிறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வேலை நடைபெற்றால் தான் இயங்க முடியும். ஊரடங்கில் முதல் ஒருமாத காலத்தை ஓரளவிற்கு சமாளித்து விட்டனர். தற்போது மிகக் கடுமையான சவால் அவர்களுக்கு இருக்கிறது.
வறுமையின் பிடியில் இருந்து தப்பிப்பது கடினம்
கரோனாவின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தாலும், அடுத்து வரும் வறுமையின் தாக்குதலில் மீண்டு அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்லப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கு வரவேண்டிய மானியங்களின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இவை, முதலுதவியாக இருக்கும். இரண்டாவதாக எங்களது நடப்பு முதலீட்டை அடிப்படையாகக் கொண்டு 30 விழுக்காடு மானியத்தை வழங்க வேண்டும்.
சிறு மற்றும் குறுந்தொழில்களில்தான் அமைப்புசாரா தொழிலாளர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த நேரத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் கூடும் என்றால் விரும்பத்தகாத சமூகச் சிக்கல்களுக்கு அவர்கள் தள்ளப்படும் நிலை உருவாகும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் கடமை.
இந்தியாவின் ஆதாரமாக இருக்கும் சிறு,குறு தொழில்கள்