மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மலர்சாமி (56). மனைவி வசந்தி, மகன்கள் அருண்குமார், விக்னேஷ் குமார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம் அருகே தற்போது வசித்து வருகிறார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு நுண்ணறிவு பிரிவின் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
மதுரையில் கரோனாவுக்கு பலியான சிறப்பு சார்பு ஆய்வாளர் - சிறப்பு நுண்ணறிவு பிரிவின் சிறப்பு சார்பு ஆய்வாளர்
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் கரோனாவுக்கு பலியான சிறப்பு சார்பு ஆய்வாளர்
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மலர் சாமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மதுரை காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.